Skip to main content

தமிழ்நாடு செய்தித்தாள்





விழுப்புரம் அருகே நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவர் கைது






விழுப்புரம் : சின்னசேலம் அருகே நாககுப்பத்தில் நாட்டுத் துப்பாக்கி பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாமிதுரை என்பவரை கைது செய்த போலீசார், நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பு கருவிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



நெம்மேலி திட்டத்தால் ஆலந்தூர் மக்களின்... தாகம் தீருமா?
பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், நெம்மேலி கடல்நீரை, குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து, ஆலந்துார் மண்டலத்திற்கு, 1 கோடி லிட்டர் குடிநீர் வழங்க, பிரதான குழாய் பதிக்கும் பணி, ஓராண்டாய் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தென்சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில், தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் பெறும் வகையில், 900 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2013ல் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீர், திருவான்மியூர், வேளச்சேரி, கேளம்பாக்கம், பள்ளிப்பட்டு, ஐ.டி., காரிடாரில் உள்ள பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.அடுத்த கட்டமாக, இத்திட்டத்தின் விரிவாக்கமாக கூடுதலாக, 1 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்து, ஆலந்துார் மண்டலத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 27.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு, 2016 பிப்ரவரியில் பூமி பூஜை போடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை, ஈரோட்டைச் சேர்ந்த பி அண்ட் சி., கன்ஸ்ட்ஷரக் ஷன் நிறுவனம் எடுத்தது. பணிகளை, 18 மாதங்களில் முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்த நிபந்தனை. பிரதான குழாய் பதிப்பதே, இத்திட்டத்தின் முக்கிய பணியாகும்.


நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் பிரதான திட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலை, சோழிங்கநல்லுார், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக, வேளச்சேரிக்கு பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. ஆலந்துாருக்கான குடிநீர் விரிவாக்க திட்டத்தின் படி, மேடவாக்கம் சந்திப்பில் இருந்து, இணைப்பு கொடுத்து, கூட்டு ரோடு, மவுன்ட் - -மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, உள்ளகரம் வரையும், அங்கிருந்து நங்கநல்லுார், ஆதம்பாக்கம் ஆகிய
பகுதிகளுக்கும் குழாய் சென்றடையும்.


பின், அந்தந்த பகுதியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, சுற்று வட்டார பகுதிகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் படி, நெம்மேலி தொழிற்சாலையில் கூடுதலாக, 1 கோடி லிட்டர் கடல்நீரை, குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் பணிகள், 90 சதவீதம் முடிந்துவிட்டன.மேடவாக்கம் சந்திப்பில் இருந்து, கீழ்கட்டளை, ஈச்சங்காடு சந்திப்பு வரை, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன.

பதிவு செய்த நாள்

தென்சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில், தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் பெறும் வகையில், 900 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2013ல் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீர், திருவான்மியூர், வேளச்சேரி, கேளம்பாக்கம், பள்ளிப்பட்டு, ஐ.டி., காரிடாரில் உள்ள பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, இத்திட்டத்தின் விரிவாக்கமாக கூடுதலாக, 1 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்து, ஆலந்துார் மண்டலத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 27.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு, 2016 பிப்ரவரியில் பூமி பூஜை போடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை, ஈரோட்டைச் சேர்ந்த பி அண்ட் சி., கன்ஸ்ட்ஷரக் ஷன் நிறுவனம் எடுத்தது. பணிகளை, 18 மாதங்களில் முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்த நிபந்தனை. பிரதான குழாய் பதிப்பதே, இத்திட்டத்தின் முக்கிய பணியாகும்.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் பிரதான திட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலை, சோழிங்கநல்லுார், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக, வேளச்சேரிக்கு பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. ஆலந்துாருக்கான குடிநீர் விரிவாக்க திட்டத்தின் படி, மேடவாக்கம் சந்திப்பில் இருந்து, இணைப்பு கொடுத்து, கூட்டு ரோடு, மவுன்ட் - -மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, உள்ளகரம் வரையும், அங்கிருந்து நங்கநல்லுார், ஆதம்பாக்கம் ஆகிய
பகுதிகளுக்கும் குழாய் சென்றடையும்.
பின், அந்தந்த பகுதியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, சுற்று வட்டார பகுதிகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் படி, நெம்மேலி தொழிற்சாலையில் கூடுதலாக, 1 கோடி லிட்டர் கடல்நீரை, குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் பணிகள், 90 சதவீதம் முடிந்துவிட்டன.மேடவாக்கம் சந்திப்பில் இருந்து, கீழ்கட்டளை, ஈச்சங்காடு சந்திப்பு வரை, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன.


அதேபோல, கீழ்கட்டளையில் இருந்து நங்க நல்லுார், ஆதம்பாக்கம் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வரை, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு விட்டன. இப்பணிகள் முடிந்து, ஓராண்டிற்கு மேல் ஆகிறது. ஈச்சங்காடு சந்திப்பில், 200 மீட்டர் துாரத்திற்கு மட்டும், பிரதான குடிநீர் குழாய் இணைப்பு செய்தால், ஆலந்துார் மக்களின் குடிநீர் தேவை, முழு அளவில் பூர்த்தி செய்து விடலாம்.
ஆனால், கடந்த ஓராண்டாக, குழாய் இணைப்பு செய்யப்படாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு, பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததும், அனுமதி பெறுவதற்கான முயற்சியை, குடிநீர் வாரியம் செய்யாததுமே காரணம். கீழ்கட்டளை ஏரியில் இருந்து, நாராயணபுரம் ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாயை, குடிநீர் திட்ட பிரதான குழாய்கள் கடக்க வேண்டும்.
மவுன்ட்- - மேடவாக்கம் சாலையில், போக்கு கால்வாய் குறுக்கே, சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி, குடிநீர் திட்ட குழாய் கொண்டு சென்றால், ஏரியின் உபரிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெறாமல், முக்கியமான குடிநீர் திட்ட பணியை, அதிகாரிகள் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். உரிய அனுமதி கிடைத்து, பணிகளை விரைந்து முடித்தால் தான், ஆலந்துார் மண்டல மக்களின் தாகம் தீரும்.மவுன்ட்- - மேடவாக்கம் சாலையில், போக்கு கால்வாய் குறுக்கே, சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி, குடிநீர் திட்ட குழாய் கொண்டு சென்றால், ஏரியின் உபரிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெறாமல், முக்கியமான குடிநீர் திட்ட பணியை, அதிகாரிகள் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். உரிய அனுமதி கிடைத்து, பணிகளை விரைந்து முடித்தால் தான், ஆலந்துார் மண்டல மக்களின் தாகம் தீரும்.


எங்கள் தரப்பில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. குறிப்பிட்ட, 200 மீட்டர் துாரம், குழாய் இணைப்பு செய்தால், ஆலந்துாருக்கு குடிநீர் வினியோகம் உடனடியாக துவங்கும். பொதுப்பணித்துறை அனுமதிக்காகவே காத்திருக்கிறோம்.
ஒத்துழைப்பு தர போலீஸ் மறுப்பு?
தமிழக சிறைகளில் சோதனை நடத்த, சிறைத் துறை அதிகாரிகளுக்கு, போலீசார் ஒத்துழைப்பு தர மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டு இருந்த, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரன்கள், முகமது ரிகாஸ், முகமது ரபீக் உள்ளிட்டோர், சிறையை உல்லாச விடுதி போல் மாற்றினர்.மேலும், 'வாட்ஸ் ஆப்' காலில், வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன் பேசி, போதை கடத்தலிலும் ஈடுபட்டனர்.


அதேபோல், போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஸ்மார்ட் போனில், 'செல்பி' எடுத்து, வீட்டுக்கு அனுப்புவது, சிறைக்கு வெளியே உள்ள, கூட்டாளி களுடன் பேசி, சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதுபற்றி
கண்டுபிடித்த, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., - தமிழக சிறைத்துறை கூடுதல், டி.ஜி.பி., அசுதோஷ்சுக்லாவுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்படி, சிறைத்துறை விஜிலென்ஸ் போலீசார், புழல் மத்திய சிறையில் அதிரடி சோதனைநடத்தினர்.

அப்போது, போதை கடத்தல்காரன்கள், பயங்கரவாதி களிடம்,இரண்டு ஸ்மார்ட் போன்கள்,5 மொபைல் போன்கள்சிக்கின. அவற்றில் இருந்த, மெமரி கார்டில், அவர்கள் போட்ட ஆட்டம் அத்தனையும் படங்களாக இருந்தன.சமீபத்தில், இந்த படங்கள், 'வாட்ஸ் ஆப்'பில், வெளி யானதால், புழல் மத்திய சிறையில் நடக்கும் கூத்துகள், வெளிச்சத்திற்கு வந்தன. அதன்பின், சர்ச்சைக்குரிய கைதிகள் முகமது ரிகாஸ் உள்ளிட்ட ஐந்து பேர், வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். புழல் சிறை வார் டன்கள் 17 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைதிகளின் அடாவடி செயலை முடிவுக்கு கொண்டு வர, தமிழகத்தில் உள்ள, 9 மத்திய சிறைகள் உட்பட, 138 சிறைகளிலும், போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக, சேலம், கடலுார், கோவை சிறைகளில், 500க்கும் மேற்பட்
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், திடீர் 



சென்னை விமான நிலையத்தில் 79 வது முறையாக கண்ணாடி உடைந்தது.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 79 வது முறையாக கண்ணாடி உடைந்தது. இங்கு 1-வது நுழைவு வாயிலில் வாகனங்கள் வந்து செல்லும் பாதை உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்ணாடி இன்று திடீரென உடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் 78 முறையாக கண்ணாடி உடைந்துள்ளது. இந்நிலையில் இன்று 79-வது முறையாக கண்ணாடி உடைந்த சம்பவம் நடந்துள்ளது.




Comments

Popular posts from this blog

Kaℝthik☘